Pages

August14

ஆகஸ்ட் 14

பகலின் குளிர்ச்சியான வேளையிலே

"பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்" (ஆதி.3:8)
மனிதன் பாவஞ்செய்திருந்தபோதிலும், அவன் பேரில் தேவன் கொண்டிருந்த அன்பு சற்றும் மாறவில்லை. அவர் மனிதன் நேசித்திருக்கவில்லையெனில், அவனைச் சந்திக்கும்படி அவர் மறுபடியுமாகத் தோட்டத்துக்கு வந்திருக்கமாட்டார். அவனைத் தண்டித்துத் தோட்டத்துக்கு வெளியே அனுப்புவது மட்டுமே அவரது நோக்கமாக இருந்திருக்குமென்றால், ஒரே ஒரு தூதனை அனுப்பி அவர் அந்த வேளையை மிக இலகுவாகச் செய்து முடித்திருக்கக் கூடும்.

இங்கு "உலாவுகிற" என்னும் வார்த்தையானது மூலபாஷயில் 'வழக்கமான முறையில் உலாவுதல்' என்று பொருள்படுகிறது. ஆகவே தேவன் ஏதேன் தோட்டத்தில் தம்முடைய பிள்ளைகளை எப்போதும் போல வழக்கமான முறையில்தான் சந்திக்கும்படி வந்தார். நம்முடைய பிள்ளைகள் ஏதாகிலும் குறும்பு செய்வார்களாயின் அவர்களை தண்டிக்கும்படி நாம் பெரும்பாலும் ஆத்திரத்துடன் விரைவது போல அவர் பறந்தோ அல்லது ஓடியோ போகவில்லை. அவர் நமக்கு எவ்வளவு அறுமையானதொரு முன்மாதிரியை வைத்திருக்கிறார்!

"பகலில் குளிர்ச்சியான வேளையிலே" - 'குளிர்ச்சி' என்பது 'காற்று' என்றும் பொருள்படும். ஆம், தோட்டத்தில் தேவன் உலாவியபோது, ஒரு குளிர்ந்த காற்று வீசியிருக்க கூடும். தேவன் தம்மோடு ஒரு குளிர்ந்த காற்றை கொண்டுவருகிறார். பாவம் மனிதனை இளைப்பாறுதலற்றவனாக்குகிறது. ஆகவே அவனுக்கு ஆறுதல் தேவையாயிருக்கிறது. மனிதனுடைய துயரத்தில் அவனை ஆறுதல்படுத்தும்படியாகவே தேவன் "பகலில் குளிர்ச்சியான வேளையிலே" வந்திருக்க கூடும்.

யாராகிலும் ஒருவர் ஒரு தவறு செய்து, அதற்காக அந்நபர் கண்டித்துணர்த்தபட அல்லது தண்டிக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் அவரோடு செயல்படுமுன்னதாக, உங்களுடைய இருதயத்தில் கோபம் அல்லது வெறுப்பின் ஒரு சுவடாகிலும் காணப்படுகிறதா என்று பரிசோதித்து பாருங்கள். நாம் நம்முடைய கோபக் கனலில் எந்தவொரு காரியத்தையும் செய்யாதிருப்போமாக. தேவன் யாதொன்றையும் ஆத்திரமாகச் செய்வதில்லை. ஆகவே நாமும் எதையும் அவ்விதம் செய்யகூடாது.

தவறான நேரத்தில் பேசப்பட்ட ஒரு சரியான வார்த்தை தவறானது; தவறான நேரத்தில் அல்லது தவறான விதத்தில் செய்யப்பட்ட ஒரு சரியான காரியமும் தவறானதே.

No comments:

Post a Comment